
காலத்தால் அழியாத கட்டுமானங்களை உலகுக்கு அளித்திட்ட கரிகால் பெருவளத்தானும் , ராஜராஜனும் வாழ்ந்த பெருமைமிகு தஞ்சை மாநகரில் கட்டுமான பொறியாளர்களுக்கான சங்கம்
“கட்டட பொறியாளர்கள் சங்கம் தஞ்சாவூர்”
CEAAT எனும் பெயரில் கடந்த 2000- ம் ஆண்டு பொறியாளர் v. லெனின் அவர்களை சாசனத் தலைவராக கொண்டு ஆரம்பிக்கப்பட்டு அன்று முதல் இன்று வரை 16 தலைவர்களால் பல சிறப்பான செல்பாடுகளால் இப்பகுதியில் மட்டுமல்லாது மாநில கூட்டமைப்பிலும் (FACEAT) தனக்கென ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.


“பொறியாளர்கள் உறுதிமொழி “
- சிந்தித்து உழைப்போம்
- திட்டமிட்டு உழைப்போம்
- நல்ல செயல்களுக்காக உழைப்போம்
- வெகுச் சிறப்பாக தழைப்போம்
- முன்னேறுவோம் முன்னேற்றுவோம்
“ஆண்டின் சங்க செயல்பாடுகள் “
சங்க உறுப்பினர்கள் நலன் மற்றும் பொது நலன் கருதி “CEAAT WELFARE TRUST” துவங்கப்பட்டு சொந்த இடத்தில் சுமார் 200 பேர் அமரக் கூடிய குளிரூட்டப்பட்ட அரங்கம் மற்றும் உணவு அரங்கம் CEAAT சங்க தலைவர்களாலும் முன்னாள் தலைவர்களாலும் மற்றும் உறுப்பினர்களாலும் உருவாக்கப்பட்டது என்பதில் CEAAT பெருமையடைகிறது
- ஓவ்வொரு மாதமும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
- சிறப்பு செயற்குழு கூட்டங்கள் தேவைக்கருதி நடத்தப்படுகிறது
- ஓவ்வொரு ஆண்டும் பொறியியல் துறையில் சிறப்பாக செயல்பட்ட பொறியாளர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்படுகிறது.
- தொழில்நுட்ப கருத்தரங்குகள்
- தொழில் திறன் மேம்பாட்டு முகாம்
- கட்டுமான பொருட்கள் கண்காட்சி
- குடும்பவிழா
- 10 மற்றும் 12 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படுகிறது
- விளையாட்டுப் போட்டிகள்
- தொழிற்சாலை பார்வையிடுதல்
- உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா ஓவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளப்படுகிறது
- மரக்கன்றுகள் நடும் பணி